×

ஸ்டெர்லைட் சார்பில் பொங்கல் விழா

தூத்துக்குடி, ஜன. 19: ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. புதூர் பாண்டியாபுரம், மீளவிட்டான், கக்கன்ஜி நகர், அருந்ததிநகர், சில்லாநத்தம் சாமிநத்தம், நடுவக்குறிச்சி, காயலூரணி மேற்கு, ராஜாவின்கோவில், சங்கரப்பேரி, நயினார்புரம், தாளமுத்துநகர், முத்தையாபுரம், கால்டுவெல் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பொங்கலிட்டு தைத்திருநாள் கொண்டாடப்பட்டது. காணும் பொங்கல், திருவள்ளுவர் தினத்தன்று கோலப்போட்டி, கலைநிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன சமுதாய வளர்ச்சி பிரிவு தலைவர் சுந்தர்ராஜ், காப்பர் உற்பத்தி பிரிவு தலைவர் மாரியப்பன் மற்றும் ஸ்டெர்லைட் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொங்கல் விளையாட்டுப் போட்டிகளை ஸ்டெர்லைட் நிறுவனத்துடன் தாயகம் சோசியல் டிரஸ்ட்,பெல் டிரஸ்ட், துளசி சோசியல் டிரஸ்ட் இணைந்து நடத்தின.

The post ஸ்டெர்லைட் சார்பில் பொங்கல் விழா appeared first on Dinakaran.

Tags : Pongal Festival ,Sterlite ,Thoothukudi ,Pongal ,Thoothukudi Corporation ,Sterlite Copper Company ,Pudoor Pandiyapuram ,Ryavittan ,Kakanji Nagar ,Arundhathinagar ,Chillanatham Saminattam ,Madhukurichi ,Kayalurani West ,Rajavinkovil ,Sankarapperi ,Nayanarpuram ,Thalamuthunagar ,Pongal Festival by ,
× RELATED பவானி அருகே கோலாகலம்: மயிலம்பாடி கரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா